Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vijay kumar surrender

வனிதா மகன் கோர்ட்டில் ஆஜர்: விசாரணை தள்ளிவைப்பு

நடிகை வனிதா - நடிகர் ஆகாஷ் மகன் விஜய் ஸ்ரீஹரி, நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டான். ரகசிய விசாரணை கோரியதை தொடர்ந்து, விசாரணை 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும், நடிகர் ஆகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். வனிதா - ஆகாஷ் பரஸ்பர (more…)

நடிகை வனிதாவின் மகனை, வரும் 13ம் தேதி . . .

நடிகை வனிதாவின் மகனை, வரும் 13ம் தேதி ஆஜர்படுத்த போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா. இவரும் சினிமாவில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்த் என்ற ஆகாஷை, வனிதா திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து பெற்ற பின், ஆனந்தராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், வனிதா விஜயகுமார், ஆனந்தராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், ஆகாஷûக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைபடுத்தப்பட்டேன். ஆகாஷ், அவரது குடும்பத்தினர் என்னை மோசமாக நடத்தினர். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரிக்கு ஒன்பது வயது. இரண்டாவதாக மகள் பிறந்தார்.நான் கர்ப்பமுற்றிருந்த போது கூட, என்னை மோசமாக நடத்தினர். செ

தலைமறைவாக இருந்த விஜயகுமார் திடீர் . . .

மகளும், நடிகையுமான வனிதா தொடர்பான வழக்கு சம்பந்தமாக, ஐதராபாத்திலிருந்து நடிகர் விஜயகுமார், புறநகர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் நேரில் திடீரென ஆஜரானார். நடிகை வனிதாவின் மகனை விஜயகுமார் வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. நடிகர் விஜயகுமார் கொடுத்த புகாரை அடுத்து,  வனிதாவின் கணவர் ஆனந்தராஜனை மதுரவாயல் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், ஆனந்தராஜன் தினசரி மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன்,  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கணவனை கைது செய்ததால் கொதித்துப்போன நடிகை வனிதா, விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா, விஜயகுமாரின் முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இப