ஆனந்த விகடனில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவ ர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ். பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்த வர் மதன். அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தா ளராக உயர்த்தின.
ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர் வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார். இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden hand shake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார். ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டு ம் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த