Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Weekly Tamil Maganzine

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறி

வர்மத்தின் மர்மங்கள்

சித்தர்களால் கண்டறியப்பட்ட சித்த மருத்துவத்தில் வர்ம மருத்துவம் மாபெரும் மருத்துவமாகத் திகழ்கிறது. எல்லா மருத்துவத்திற்கும் முதன்மையானது வர்ம மருத்துவ முறையே. இந்த வர்ம மருத்துவ முறையில் உடலை பல கூறுகளாக பிரித்து வெளிப்பாகங்களையும், உள்ளுறுப்புகளையும், நரம்பு, எலும்பு, தசை, தமனி போன்ற எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து அறியப்பட்ட, அதாவது பழமை பெற்ற மருத்துவ முறையாகும். இப்படி சிறப்பு வாய்ந்த மருத்துவ முறைதான் மொழி மாற்றத்திற்கு ஏற்ப வட இந்தியாவில் ஆயுர்வேதமாகவும், தென்னிந்தியாவில் சித்த மருத்துவமாகவும் விளங்குகிறது. இத்தகைய சூழலில் வர்ம மருத்துவம் இன மொழி மாறு பாட்டினால் மறைத்து வைக்கப்பட்ட மருத்துவமாக இருந்தது. வர்ம மருத்துவம் இல்லாமல் சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் மக்கள் மத்தியில் பரவியிருந்தது. இதனால் வர்ம மருத்துவம் புரியாத புதிராகவும் மற்றும் மறந்து போனமருத்துவமாகவு

திருக்குறளும் மருத்துவமும்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.” - (குறள் 942 - அதிகாரம் - 95) உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும். மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும். “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.” தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள். “பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது ப

அச்சச்சோ மறந்துச்சே – நினைவாற்றல்

அச்சச்சோ... மறந்து போச்சே ... இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரைத் தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம். பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளை பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து

தாய்மை அடைய தகுந்த வயது . . .

நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக போற்றி அனுபவிக்க வேண்டிய இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். “பருவத்தே பயிர் செய்” என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல. மகளிருக்கும் இது பொருந்தும். இளவயது பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே 24-26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும் பிள்ளை பேறை தள்ளிப் போட நினைக்கிறார்கள். நாம் நல்ல நிலைக்கு வந்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்து கின்றனர். சில பெண்கள், திருமணத்திற்கு பிறகு

குழந்தைகளை தாக்கும் நோய்களின் அறிகுறிகள்

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது.  குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள்.  ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை. ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள்.  அதைப்பற்றி அறிந்து கொள்வ

Nakkheeran பிறந்த கதை

Nakkheeran (Most Popular Tamil Magazine) History He, Nakkheeran Gopal was born on 10-4-59 at Aruppukottai, Virudhunagar District. His father Mr.S.Ramanathan who was working as a lower grade employee in Highways Department, has got retired recently. His mother name is Rajamanickammal and he has got two sisters, One brother. After completing fifth standard at Aruppukottai Municipal School he joined in S.B.K. Higher Secondary School, Where he finished Eleventh Standard. Then he finished P.U.C., B.Com., Subsequently at Devankar, and S.B.K. College. During his academic period he showed great interest at art works and Hockey. During 1977-78 he joined a rice shop after completing his graduation, as he doesn't want to be idle. But his father was not interested in his doing the job. they wanted him...